×

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாநகர பேருந்து கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை: சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை


சென்னை: சென்னை விவேகானந்தர் இல்லத்தல் இருந்து மாநகர பேருந்து (38.சி) நேற்று மாலை, திரு.வி.க நகர் நோக்கி சென்றது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேருந்து வந்ததும், கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் மேற்கூரை மீது ஏறியும், படிக்கட்டில் தொங்கியபடியும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலர் பதற்றமடைந்தனர். அப்போது கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் கூரை மீது ஏறி, முன்பக்க கண்ணாடி அருகே அமர்ந்தும், நின்றும், ‘மாநில கல்லூரி மாணவர்கள் தான் மாஸ்’ என்று கூறி கோஷம் எழுப்பினர். சென்ட்ரல் ரயில் நிலைய சிக்னலில் பணியில் இருந்த போலீசார் இதை பார்த்து, மாணவர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் மாணவர்கள் போலீசார் வருவதை பார்த்தவுடன் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, எழும்பூர் மற்றும் பூக்கடை போலீசார், சிசிடிவி பதிவுகளை பெற்று தப்பி ஓடிய மாணவர்களை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ரூட் தல பிரச்னை இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் மாநில கல்லூரி மாணவர்கள் ரூட் தல பிரச்னையை தொடங்கி பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரைவர் முகத்தில் பாட்டில் வீச்சு: தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையத்திலிருந்து பிராட்வே பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்து (தடம் எண் 44 கட்) நேற்று சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் பயணம் செய்த ஒரு வாலிபர் படிக்கட்டில் தொங்கியபடி வந்தார். இதை டிரைவர் வேல்முருகன் கண்டித்துள்ளார். இதனால் அந்த வாலிபருக்கும், டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, பேருந்து பிராட்வே பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டு மீண்டும் தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையத்திற்கு ஸ்டான்லி மருத்துவமனை வழியாக வந்தது. அப்போது, அந்த மர்ம நபர் டிரைவர் மீது காலி பாட்டிலை வீசினார். இதில் டிரைவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

The post சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாநகர பேருந்து கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை: சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Central Railway Station ,CHENNAI ,Vivekananda Illatal ,Mr. ,VK ,Nagar ,railway station ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே...